உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் டாக்டர் மரணத்துக்கு முன் நடந்த சம்பவங்கள் | kolkata woman doctor death | kolkata | Sanjai Rai

பெண் டாக்டர் மரணத்துக்கு முன் நடந்த சம்பவங்கள் | kolkata woman doctor death | kolkata | Sanjai Rai

பெண் டாக்டர் மரணத்துக்கு முன் நடந்த சம்பவங்கள் | kolkata woman doctor death | kolkata | Sanjai Rai கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி போட்டுள்ளது. 31 வயதான அந்த டாக்டருக்கு நீதி கேட்டு நாடு தழுவிய அளவில் போராட்டம் நடக்கிறது. இன்னொரு பக்கம் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன் சஞ்சய் ராயை சிறப்பு விசாரணை பிரிவு போலீசார் கைது செய்தனர். போலீஸ் கஸ்டடியில் அவனிடம் விசாரணை நடக்கிறது. வடக்கு கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்தது. 3வது மாடியில் உள்ள செமினார் ஹாலில் வைத்து பெண் டாக்டர் கொல்லப்பட்டார். சிசிடிவி கேமராவை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். சம்பவ இடத்தில் சஞ்சய் விட்டு சென்ற ப்ளூடூத் ஹெட்செட், ஷூவில் இருந்த ரத்தக்கறையை வைத்து அவனை தூக்கினர். இந்த நிலையில் கொலை நடப்பதற்கு முன்பு சஞ்சய் ராய் என்னவெல்லாம் செய்தான் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. சஞ்சய் ராய் போலீஸ் டிப்பார்ட்மென்டில் தன்னார்வலராக வேலை பார்த்து வந்தான். மாத சம்பளம் 12 ஆயிரம் ரூபாய். அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் வேலை ஒதுக்கப்பட்டது. அங்கு நோயாளிகளுக்கு உதவும் புரோக்கர் போலவும் செயல்பட்டு வந்தான். கடந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை கரக்பூரில் போலீஸ் வெல்பர் மீட்டிங் நடந்தது. அதில் இந்த சஞ்சய் கொடூரனும் பங்கேற்றான். வியாழன் காலையில் கொல்கத்தா திரும்பினான். முதல் வேலையாக சம்பவம் நடந்த அரசு மருத்துவமனைக்கு சென்றான். அங்கு தான் அவன் புரோக்கராகவும் இருந்தான். மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அட்மிஷன் வாங்கி கொடுத்தான். பின்னர் வீட்டுக்கு வந்த சஞ்சய் ராய் மீண்டும் இரவில் மருத்துவமனைக்கு சென்றான். அப்போது இரவு 11 மணி இருக்கும். அதே நோயாளிக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டி இருந்தது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை சஞ்சய் ராய் செய்தான். சிறிது நேரம் அவர்களிடம் பேசி விட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினான். நள்ளிரவு 1 மணி ஆனது. இன்னொரு நோயாளிக்கு ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்தான் சஞ்சய் ராய். தேவையான வேலைகளை செய்து கொடுத்தான். நோயாளியின் உறவினர் ஒருவருடன் சேர்ந்து மருத்துவமனைக்கு முன் பகுதியில் வைத்து மது அருந்தினான். அதிகாலை 3 மணிக்கு புல் போதையில் சம்பவம் நடந்த மருத்துவமனையின் 3வது மாடிக்கு சென்றான். நெஞ்சக மருத்துவ பிரிவு பகுதியை விசிட் அடித்தான். சில நிமிடங்களில் செமினார் ஹாலுக்குள் நுழைந்தான். அங்கு தான் பெண் டாக்டர் தனது முதுகலை பாடங்களை படித்து விட்டு தூங்கிக்கொண்டு இருந்தார். அடுத்த 45 நிமிடத்தில் செமினார் ஹாலை விட்டு அவன் வெளியேறினான். இந்த இடைவெளியில் தான் பெண் டாக்டர் கொல்லப்பட்டார். பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டார். இப்படி தான் பெண் டாக்டர் பலாத்காரம், கொலை சம்பவம் நடந்தது. சஞ்சய் ராய் செமினார் ஹாலுக்குள் நுழையும் போது அவனது கழுத்தில் ப்ளூடூத் ஹெட் செட் தொங்கியது. வெளியே வரும் போது இல்லை. பெண் டாக்டர் சடலம் பக்கத்தில் இருந்து அதை போலீசார் கைப்பற்றினர். அது தான் சஞ்சய் ராயை சிக்க வைத்த முக்கிய எவிடன்ஸ். சஞ்சய் ராய் இயல்பிலேயே ஒரு அரக்கன். அவனுக்கு 4 மனைவிகள். 3 பேர் அவன் கொடுமை தாங்க முடியாமல் ஓடி விட்டனர். ஒருவர் கேன்சர் பாதிப்பில் இறந்து விட்டார். கைதான பிறகும் கூட அந்த அரக்கனின் திமிர் அடங்கவில்லை. அதான் அரஸ்ட் பண்ணிட்டீங்களா. அப்டியே என்ன தூக்குல போட்ருங்கனு தெனாவட்டாக போலீசிடம் சொல்லி இருக்கிறான்.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை