கஞ்சா புழக்கத்திற்கு கொடுக்கும் மிகப்பெரிய விலை | Annamalai | BJP | State president | Girl abuse |
கஞ்சா புழக்கத்திற்கு கொடுக்கும் மிகப்பெரிய விலை | Annamalai | BJP | State president | Girl abuse | சுதந்திர தின ஐ-பேப்பர் ஆஃபர் 50% தள்ளுபடி Subscribe Now: https://subscription.dinamalar.com/?utm_source=ytb தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே, கஞ்சா போதையில் இருந்த 4 பேர், இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திமுகவை சேர்ந்த, உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி கவிதாசன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெருகி இருக்கும் போதை கலாச்சாரம், பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதாலேயே, போலீசும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கூட்டுப் பாலியல் பலாத்காரம் போன்ற மிக மோசமான குற்றம் அரங்கேறி இருக்கிறது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த இயலாமல், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல், தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போதை பொருள் புழக்கத்திற்கும், ஆளுங்கட்சியினர் என்பதற்காக குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிகப் பெரியது என்பதை முதல்வர் எப்போது உணர்வார்? என்றும் அண்ணாமலை கேட்டுள்ளார்.