பெண் டாக்டர் சம்பவம்: ராகுல் கிளப்பும் புயல் Rahul Gandhi
பெண் டாக்டர் சம்பவம்: ராகுல் கிளப்பும் புயல் Rahul Gandhi | Kolkata doctor rape-murder case | RG Kar Medical College சுதந்திர தின ஐ-பேப்பர் ஆஃபர் 50% தள்ளுபடி Subscribe Now: https://subscription.dinamalar.com/?utm_source=ytb கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுகுறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது: பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரமான செயலால், மருத்துவர்கள், பெண்கள் இடையே பாதுகாப்பற்ற உணர்வு உண்டாகியுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்காமல், குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சியை பார்க்கும்போது, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் மீது பல்வேறு கேள்விகள் எழுகிறது. மருத்துவ கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்? நிர்பயா வழக்குக்கு பிறகு கொண்டுவரப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களை தடுப்பதில் தோல்வியடைந்தது ஏன்? ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கதுவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பேச வேண்டும், அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சமயத்தில், தாள முடியாத வலியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் பக்கம் நான் நிற்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என ராகுல் வலியுறுத்தியுள்ளார்.