வேட்டை கும்பலை தப்ப விட்ட போலீஸ் மீது ஆக்சன் | Police Suspended | Tiruchi Police | Tiruchi SP
வேட்டை கும்பலை தப்ப விட்ட போலீஸ் மீது ஆக்சன் | Police Suspended | Tiruchi Police | Tiruchi SP மணப்பாறை புத்தாநத்தம் உட்கோட்டத்திற்கு எஸ்ஐ லியோனி, வீரபாண்டி, ஷாகுல் ஹமீது மற்றும் மணிகண்டன் ஆகிய போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படையினர் மே மாதம் சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏர் கன் மூலம் பறவைகளை வேட்டையாடிய சதாசிவம் , ராமசாமி , நாகராஜை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மீது வழக்கு பதியாமல் தப்பிக்க வைக்க ஒரு லட்சம் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. ஏரிக்கரைக்கு அருகில் தனிப்படையினர் பணத்தை வாங்கி கொண்டதாகவும் எஸ்பிக்கு போனில் தகவல் சென்றது. இது குறித்து விசாரிக்க திருச்சி எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டார். விசாரணையில் போலீசார் லஞ்சம் வாங்கியது உறுதியானது. எஸ்ஐ லியோனி உட்பட 4 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி வருண்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். இனி இது போன்ற சம்பவம் தொடர்ந்தால் போலீசார் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.