உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொல்கத்தா சம்பவத்தால் பிளக்கும் இண்டி கூட்டணி | Kolkata doctor case | Mamata Banerjee

கொல்கத்தா சம்பவத்தால் பிளக்கும் இண்டி கூட்டணி | Kolkata doctor case | Mamata Banerjee

கொல்கத்தா சம்பவத்தால் பிளக்கும் இண்டி கூட்டணி | Kolkata doctor case | Mamata Banerjee மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆஸ்பிடலில் பெண் டாக்டருக்கு நடந்த அநீதியால் நாடே கொந்தளித்து கொண்டிருக்கிறது. இளம் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வெறித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நாடு முழுதும் உள்ள டாக்டர்கள் இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையில் முதல்வர் மம்தாவின் ஆதரவாளர்கள் சம்பவம் நடந்த ஆஸ்பிடலை தாக்கி சிபிஐக்கு தேவையான ஆதாரங்களை அழித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இண்டி கூட்டணி தலைவர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் போராட்டம் பெரிதாகவே, பிரியங்கா, ராகுல் உட்பட பலர் மேற்கு வங்க அரசை கடுமையாக விமர்சித்தனர். இதனால் மம்தாவுக்கு கோபம் அதிகமாகியது. ஏற்கனவே இவருக்கும் ராகுலுக்கும் ஆகாது. ஏற்கனவே ஒருமுறை எதிர்க்கட்சி தலைவராக ஆக்கப்பூர்வமாக செயல்படாத ராகுலுக்கு பிரதமர் பதவி மீது ஆசையா? என கோபமாக கூறினாராம் மம்தா. இப்போது இண்டி தலைவர்கள் எதிர்க்க ஆரம்பித்துவிட்டதால் மம்தா ஒரு முடிவுக்கு வந்துள்ளார். லோக்சபாவில் மம்தா கட்சியின் தலைவர் சுதிப் சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் நாங்கள் இண்டி கூட்டணியில் இல்லை. எங்களுக்கு லோக்சபாவில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டு இருப்பதாக தெரிகிறது. இப்போது இண்டி கூட்டணி முழுதும் ஓர் அணியாக கருதி பார்லிமென்டில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியாக இருக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் வழிகாட்டுதலின்படி தான் யார் யார் சபையில் பேச வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். இனிமேல் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் லோக்சபாவில் தன்னிச்சையாக செயல்படும்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை