முதல்வர் ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் பதில் | Railway Minister | MKStalin | Ashwini Vaishnav
முதல்வர் ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் பதில் | Railway Minister | MKStalin | Ashwini Vaishnav தமிழக ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கியிருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் அளித்து அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேஜ கூட்டணி அரசு 6,362 கோடி ஒதுக்கி உள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 7 மடங்கு அதிகம். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில் இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழக ரயில்வே மேம்பாட்டுக்கு நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம் என அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.