உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உக்ரைனில் மோடி செய்யும் தரமான சம்பவம்-பரபரப்பு பின்னணி | PM Modi ukraine visit | Russia vs Ukraine

உக்ரைனில் மோடி செய்யும் தரமான சம்பவம்-பரபரப்பு பின்னணி | PM Modi ukraine visit | Russia vs Ukraine

உக்ரைனில் மோடி செய்யும் தரமான சம்பவம்-பரபரப்பு பின்னணி | PM Modi ukraine visit | Russia vs Ukraine உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 2 ஆண்டுகளை தாண்டியும் முடிவுக்கு வரவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வந்து இருநாட்டு பிரச்னைகளையும் பேசி தீர்க்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி கடந்த மாதம் ரஷ்யாவுக்கு பயணம் செய்தார். அதே உத்வேகத்தில் போர் பூமியான உக்ரைனுக்கு இப்போது செல்ல இருக்கிறார். மோடியின் இந்த பயணம் உறுதியாகி விட்டது. நாளை போலந்து செல்லும் மோடி, அங்கிருந்து 23ம் தேதி உக்ரைன் செல்கிறார். அவர் போலந்தில் இருந்து ரயிலில் உக்ரைன் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் போலந்து, உக்ரைன் பயணம் பல சிறப்புகளை கொண்டது. கடைசி 45 ஆண்டுகளில் எந்த பிரதமரும் போலந்து செல்லவில்லை. முதல் முறையாக 45 ஆண்டுகளுக்கு பிறகு மோடி தான் செல்கிறார். அதே போல இந்தியா, உக்ரைன் இடையேயான ராஜதந்திர உறவு துவங்கி 30 ஆண்டு ஆகிறது. இந்த 30 ஆண்டில் ஒரு பிரதமர் கூட உக்ரைன் எட்டிப்பார்த்ததில்லை. இப்போது முதல் முறையாக மோடி உக்ரைன் செல்கிறார். அதுவும் போர் நடக்கும் பதட்டமான சூழலில் அவர் உக்ரைன் செல்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்ற போது முதலில் பல நாடுகள் எரிச்சல் அடைந்தன. ஆனால் அங்கு மோடி தரமான பல சம்பவங்களை செய்தார். அவர் அதிபர் புடினை சந்தித்து பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாட்டு உறவை மேம்படுத்துவது பற்றி பேசினார். முன்னதாக மோடிக்கு புடின் சிறப்பான வரவேற்பு அளித்தார். இருவரும் கட்டிப்பிடித்து பரஸ்பர அன்பை வெளிப்படுத்தினர்.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை