உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் டாக்டர் உடலில் திரவம்... உண்மையை சொன்ன நீதிபதி | kolkata woman doctor case

பெண் டாக்டர் உடலில் திரவம்... உண்மையை சொன்ன நீதிபதி | kolkata woman doctor case

பெண் டாக்டர் உடலில் திரவம்... உண்மையை சொன்ன நீதிபதி | kolkata woman doctor case | 151g Semen | CBI கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய விஷயம் பிரேத பரிசோதனை பற்றிய தகவல். பிரதே பரிசோதனை ரிப்போர்ட் படி பெண் டாக்டர் உடலில் 151 கிராம் செமன் இருந்ததாக தகவல் பரவியது. இந்திய டாக்டர் சங்க கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் டாக்டரே இது பற்றி பகீர் கிளப்பினார். நான் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை பார்த்தேன். பெண் டாக்டர் உடலில் 151 கிராம் செமன் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்படி என்றால், இந்த கொடூரத்தை கைதான சஞ்சய் ராய் மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை. இது ஒரு கூட்டு பாலியல் பலாத்காரமாக இருக்க தான் வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தார். இதே சந்தேகத்தை கொல்கத்தா ஐகோர்ட்டில் பெண் டாக்டரின் பெற்றோரும் கூறி இருந்தனர். இதையடுத்து பெண் டாக்டர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடு முழுதும் தகவல் காட்டுத் தீ போல பரவியது. போராட்டம் தீவிரம் அடைய இதுவும் ஒரு காரணம். ஆனால் இதில் உண்மை இல்லை. அப்படி ஒரு தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் இல்லை என்று கொல்கத்தா போலீஸ் அடித்து சொன்னது. சிபிஐயும் இதை உறுதி செய்தது. இதற்கிடையே கொல்கத்தா டாக்டர் வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பரபரப்பான வாதம் நடந்தது. அப்போது வக்கீல் ஒருவர், 151 மில்லி கிராம் செமன்.... என்று ஆரம்பித்தார். உடனே தலைமை நீதிபதி டிஒய் சுந்திரசூட் உட்பட 3 நீதிபதிகளும் ஒரே நேரத்தில் குறுக்கிட்டனர். கேள்வி எழுப்பிய வக்கீல் மட்டும் இன்றி அனைத்து வக்கீல்களுக்கும் அறிவுரை வழங்கினர். இப்படி குழப்பிக்கொள்ளாதீர்கள். அந்த 151 என்ற அளவு எதை குறிக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். காரணம், எங்கள் கையில் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளது. தயவது செய்து சோசியல் மீடியாவில் பரவும் தகவல்களை எடுத்துக்கொண்டு கோர்ட்டில் வாதம் செய்ய வேண்டாம் என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் சொன்னார்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை