உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈர்த்த முதலீடுகள் எங்கே? அன்புமணி சரமாரி கேள்வி Anbumani Ramdoss Pmk CM Stlain US tour investments

ஈர்த்த முதலீடுகள் எங்கே? அன்புமணி சரமாரி கேள்வி Anbumani Ramdoss Pmk CM Stlain US tour investments

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுமார் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதில் வெறும் 1.80% முதலீடுகள் மட்டுமே செயல்வடிவம் பெற்றிருப்பதும், துபாய், ஸ்பெயின் நாடுகளில் கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் எந்த முன்னேற்றமும் இல்லாததும் கவலை அளிக்கின்றன. தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் வரும் 27ஆம் தேதி முதல் 17 நாட்களுக்கு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகள், புதிய வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது தொழில் முதலீடு ஈர்க்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதவை ஆகும்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை