உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவை இலங்கை சீண்டுவதாக பாமக கண்டனம் Fishermen | Nagai

இந்தியாவை இலங்கை சீண்டுவதாக பாமக கண்டனம் Fishermen | Nagai

இந்தியாவை இலங்கை சீண்டுவதாக பாமக கண்டனம் Fishermen | Nagai | 11 Arrested | Stalin | Letter to Central Govt| Anbumani| நாகப்பட்டினம், அக்கரைபேட்டையை சேர்ந்த 11 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். விசைப்படகை பறிமுதல் செய்தனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்தாண்டு மட்டும் 324 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 படகுகள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். மீனவர்கள் கைதுக்கு தமிழக கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாமக தலைவர் அன்புமணி, இக்கட்டான நிலையில் இந்தியா செய்த உதவிகளை கூட இலங்கை நினைத்து பார்க்காமல், தமிழக மீனவர்களை கைது செய்து இந்தியாவை சீண்டி வருகிறது என கூறியுள்ளார். CPI மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கையில், பல்வேறு கடல்சார் மீனவர் ஒப்பந்தங்கள் இருந்தாலும், அவற்றை இலங்கை அப்பட்டமாக மீறுகிறது. தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்கிறது என கண்டித்துள்ளார்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ