உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொந்தளித்த முல்லை பெரியாறு விவசாயிகள்: கேரள யூடியூபர்களுக்கு எச்சரிக்கை! Mullai Periyaru Dam

கொந்தளித்த முல்லை பெரியாறு விவசாயிகள்: கேரள யூடியூபர்களுக்கு எச்சரிக்கை! Mullai Periyaru Dam

கொந்தளித்த முல்லை பெரியாறு விவசாயிகள்: கேரள யூடியூபர்களுக்கு எச்சரிக்கை! Mullai Periyaru Dam | Tamilnadu | Kerala | Former Protest முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி கேரளாவில் தொடர்ந்து விஷம பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. அணை உடைந்தால் கேரளாவில் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என வதந்தி பரப்பப்படுகிறது. தமிழகத்தின் தரப்பில் பலமுறை அணையின் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னரும் வதந்தி பரப்புவது நிறுத்தப்படவில்லை. வயநாடு நிலச்சரிவையடுத்து தற்போது கேரள யூடியூபர்களும், அரசியல்வாதிகளும் முல்லை பெரியாறு பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். இதனை கண்டித்து தேனியில் விவசாய சங்கத்தின் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். முன்னதாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள பென்னி குயிக் சிலைக்கு ஊர்வலமாக சென்று விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உண்ணாவிரத திடலில், முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பி வரும் கேரள மாநிலத்தவரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை