கோவை மெட்ரோ திட்டத்தில் கோட்டைவிட்ட தமிழக அரசு | coimbatore metro rail project | kovai metro plan
கோவை மெட்ரோ திட்டத்தில் கோட்டைவிட்ட தமிழக அரசு | coimbatore metro rail project | kovai metro plan மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: திருப்பிவிட்ட மத்திய அரசு கோவையில் மெட்ரோ ரயில் இயக்க சாத்தியம் இருக்கும் 4 வழித்தடங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்தது. திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என நான்கு வழித்தடங்களில் 144 கி.மீ துாரத்துக்கு திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது முதல்கட்டமாக அவிநாசி ரோடு மற்றும் சத்தியமங்கலம் ரோட்டில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. உத்தேசமாக 10,740 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. மொத்தம் 39 கி.மீ. துாரத்துக்கு 32 நிறுத்தங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. சமீபத்தில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழு கள ஆய்வு செய்த பிறகு 4.2 கி.மீ., துாரம் குறைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு அனுமதி மற்றும் நிதியுதவி கேட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பியது. நிதி ஆதாரத்துக்கு மத்திய அரசு 15 சதவீதம், மாநில அரசு 15 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தவும், மீதமுள்ள 70 சதவீத தொகையை வங்கி கடனுதவி பெற்று செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், கடனுதவி பெறுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையில் சில மாறுதல் செய்து அனுப்புமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. மெட்ரோ ரயில் கொள்கைபடி, எந்த ஒரு நகரத்திலும் மெட்ரோ ரயில் அமைக்க வேண்டுமென்றால், அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விரிவான திட்ட அறிக்கையோடு, திட்டமிடப்படும் வழித்தடத்தை ஒட்டி அமைந்துள்ள, வேறு சில சிறு வழித்தடங்களையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த திட்ட அறிக்கை அளிக்க வேண்டும். திட்டத்தின் பிரதான வழித்தடம், பொருத்தமாக இல்லை என்றாலோ அல்லது பல்வேறு காரணங்களால் கைவிடப்படும் சூழ்நிலை உருவானாலோ, வேறொரு புதிய வழித்தடத்துக்கு ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். அதாவது, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையோடு சேர்த்து, 2 அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அதன் காரணமாக திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தேவையான திருத்தங்கள் செய்து மீண்டும் திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.