உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்தடுத்து வெளியாகும் புகாரால் வெடிக்கிறது கேரள சினிமா | Kerala | Actor Siddique |Director Ranjith

அடுத்தடுத்து வெளியாகும் புகாரால் வெடிக்கிறது கேரள சினிமா | Kerala | Actor Siddique |Director Ranjith

கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிராக நடந்த பாலியல் புகார்கள் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் பல முன்னணி நடிகர்களின் கட்டுப்பாட்டில் கேரள சினிமா இருப்பதாகவும், நடிகைகளிடம் அத்துமீறல்கள் நடப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை கூற தொடங்கி உள்ளனர். இதில் அடுத்தடுத்து பெரும் புள்ளிகள் சிக்குவது கேரள சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து மனம் திறந்தார்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை