உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறைத்துறை டிஜிபி அதிரடி நடவடிக்கை Bangaluru Jail | Actor Dharshan

சிறைத்துறை டிஜிபி அதிரடி நடவடிக்கை Bangaluru Jail | Actor Dharshan

சிறைத்துறை டிஜிபி அதிரடி நடவடிக்கை Bangaluru Jail | Actor Dharshan | Actress Bavithra | Murder Case | கன்னட சினிமா நடிகர் தர்ஷனின் தோழியான- நடிகை பவித்ராவை விமர்சித்து தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி சர்ச்சையான கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தர்ஷன் மனைவியை பிரிந்ததற்கு பவித்ரா தான் காரணம் என ஆபாசமாக திட்டி பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டார். அவரை கடத்தி கொலை செய்ததாக, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா, தர்ஷனின் நண்பர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் சிறையில் உள்ள தர்ஷன், அங்கு சுகபோக வாழ்க்கை அனுபவிக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கையில் டீ கப் மற்றொரு கையில் சிகரெட் உடன் நாற்காலியில் தர்ஷன் உட்கார்ந்து இருக்கிறார். அவரது மேலாளர் நாகராஜ், ரவுடி வில்சன் உள்ளிட்டோர் உடன் உட்கார்ந்து இருக்கிறார்கள். சிறைக்குள் இருந்தபடி நடிகர் தர்ஷன் வீடியோ காலில் பேசும் வீடியோவும் வெளியானது. கொலை வழக்கு கைதியாக உள்ள தர்ஷன், சிறையில் சொகுசு வசதிகளுடன் இருப்பது பேசு பொருளானது. கொல்லப்பட்ட ரேணுகா சுவாமியின் தந்தை காசிநாத் கூறும்போது, மகனை இழந்து நாங்கள் வேதனை படுகிறோம். ஆனால், அவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். அவர் சிறையில் இருக்கிறாரா அல்லது ஏதேனும் ரிசார்ட்டில் இருக்கிறாரா என சந்தேகம் வருகிறது. இது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றாார். தர்ஷனுக்கு சலுகை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிறைத் துறை டிஜிபி மாலினி சிறையில் விசாரணை நடத்தினார். 7 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார். நடிகர் தர்ஷனை பெல்லாரி சிறைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த விஷத்தில் சிறை கண்காணிப்பாளர் உட்பட சில மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ