உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாக்கிங் சென்றவருக்கு என்ன நேர்ந்தது?

வாக்கிங் சென்றவருக்கு என்ன நேர்ந்தது?

வாக்கிங் சென்றவருக்கு என்ன நேர்ந்தது? சேலம் ஆத்தூரை அடுத்த பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரவி. வயது 49. அதிமுகவில் கிளை செயலாளராக இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். ரவி வழக்கமாக இரவு நேரத்தில் வாக்கிங் போவதை வழக்கம். நேற்று இரவும் அதுபோல வீட்டில் இருந்து சென்றார். வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. அவர் வந்துவிடுவார் என நினைத்து கதவை தாழிடாமல் குடும்பத்தினர் தூங்கிவிட்டனர். காலையில் எழுந்து ரவியின் அறையில் பார்த்தபோது, அவர் இல்லை. இரவு வாங்கிங் போனவர் திரும்பி வராதது அப்போதுதான் தெரிந்தது. அவரை தேடியபோது, பக்கத்து தெருவில் உள்ள ரவியின் அக்கா ராஜேஸ்வரி வீட்டு வாசலில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையிலும், முதுகிலும் சிறிய காயங்கள் இருந்தன. சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த ஏத்தாப்பூர் போலீசார், அதிமுக நிர்வாகி ரவி, தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை