உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்பனா சாவ்லா மரணம் கற்றுக்கொடுத்த பாடம் |Boeing starliner | Set to return | Without Sunita william

கல்பனா சாவ்லா மரணம் கற்றுக்கொடுத்த பாடம் |Boeing starliner | Set to return | Without Sunita william

கல்பனா சாவ்லா மரணம் கற்றுக்கொடுத்த பாடம் |Boeing starliner | Set to return | Without Sunita williams | Barry wilmore | இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் ஜூன் 5ல் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். ஜூன் 6ல் தொடங்கி 9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுகள் நடத்தினர். திரும்பி வருவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் உண்டானது. திட்டமிட்டபடி எல்லாம் நடந்திருந்தால் ஜூன் 22ல் இருவரும் பூமிக்கு வந்திருக்க வேண்டும். கோளாறை சரி செய்ய முடியாமல் போனதால் பூமிக்கு திரும்புவது ஒத்தி வைக்கப்பட்டது. 85 நாட்களை கடந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தால் எடையிழப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த சூழலில் இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது அவர்கள் இன்றி செப்டம்பர் 6 மாலை 6.04 மணிக்கு பூமியை நோக்கி பயணத்தை தொடங்குகிறது. சுமார் 6 மணி நேரம் பயணித்து நள்ளிரவு 12.03 மணிக்கு ஸ்டார் லைனர் விண்கலம் பூமியை அடையும் என்று நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரின் பாதுகாப்பு கருதியே அவர்களை ஸ்டார் லைனர் விண்கலத்தில் பூமிக்கு அழைக்கவில்லை எனவும் நாசா விளக்கம் அளித்துள்ளது. 2003ல் நாசா சார்பில் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் இறந்தனர். அவர்களின் மரணமே தற்போது சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை பழுதான விண்கலத்தில் அழைத்து வர வேண்டாம் என்ற முடிவை நாசா எடுக்க காரணமாக அமைந்துவிட்டது. அவர்கள் இருவரையும் இன்னும் 6 மாதங்கள் கழித்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது. வழக்கமான விண்வெளி வீரர் சுழற்சி பணியின் ஒரு பகுதியாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடுத்த மாதம் ஏவப்பட உள்ளது. 4 சீட் கொண்ட டிராகன் விண்கலத்தில் 2 சீட் வில்லியம்ஸ், வில்மோருக்காக காலியாக அனுப்பப்பட்டு, பிப்ரவரியில் அதே விண்கலத்தில் அழைத்து வரப்பட உள்ளனர். அதுவரை இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்குவதற்கு தங்களை தயார் படுத்திக்கொண்டதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை