உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொத்தேரியில் போலீஸ் ரெய்டு: மாணவர்களிடம் சிக்கியது என்ன? Potheri police raid Ganja students

பொத்தேரியில் போலீஸ் ரெய்டு: மாணவர்களிடம் சிக்கியது என்ன? Potheri police raid Ganja students

பொத்தேரியில் போலீஸ் ரெய்டு: மாணவர்களிடம் சிக்கியது என்ன? Potheri police raid Ganja students flats potheri drugs seized history- sheeter Selvamani Abode Valley appartment tambaram police சென்னை, கோவை சுற்று வட்டாரங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் வெளியூர் மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் சமீபத்தில் கோவை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 500க்கு மேற்பட்ட போலீசார், வெளியூர் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ஹாஸ்டல்களில் அதிரடி சோதனை நடத்தி, 30க்கு மேற்பட்ட மாணவர்களை பிடித்தனர். கோவையில் நடந்த சோதனையில் பல கிலோ கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரைகள் சிக்கின. கோவையை தொடர்ந்து, சென்னை அருகே பொத்தேரியில் இன்று அதிரடி சோதனை நடந்தது. பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் பல மாணவ மாணவிகள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வருவதாகவும் இதனால் நடக்கும் குற்றச்செயல்களால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனடிப்படையிலேயே பொத்தேரியில் வெளியூர் மாணவர்கள் வசிக்கும் அபார்ட்மென்ட்டுகள், ஹாஸ்டல்களில் இன்று அதிகாலை முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 1000க்கு மேற்பட்ட போலீசார், அபார்ட்மென்ட்கள், ஹாஸ்டல்களில் உள்ள 1000க்கு மேற்பட்ட அறைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். மாலை வரை சோதனை நடந்தது. கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், ஹூக்கா பவுடர் உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஒரு மாணவி உட்பட 11- மாணவர்களை தனியார் மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தினர். யாரிடம் இருந்து போதை பொருளை வாங்குகிறீர்கள்? எந்த நேரத்தில் சப்ளை செய்கிறார்கள்? எப்படி கொண்டு வந்து கொடுக்கிறார்கள்? என போலீசார் துருவித்துருவி கேட்டனர். ஒருவர் மற்றவரை கைகாட்ட, செயின் போல சென்றது. கடைசியில் நந்திவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி(29) என்பது தெரிய வந்தது. கூடுவாஞ்சேரியில் பதுங்கியிருந்த அவனை இன்று பிற்பகல் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா, 4 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை, கொலை முயற்சி, மிரட்டல், கஞ்சா வழக்கு என பல வழக்குகள் அவன் மீது உள்ளன. ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான செல்வமணியிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். போதை பொருள் எங்கெல்லாம் அதிகளவில் புழக்கம் உள்ளதோ அங்கெல்லாம் அதிரடி சோதனைகள் தொடரும் என போலீசார் கூறினர்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை