உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மறைமுக உத்தரவு; த.வெ.க. நிர்வாகிகளுக்கு கெடுபிடி | TVK | Vijay | GOAT Release

மறைமுக உத்தரவு; த.வெ.க. நிர்வாகிகளுக்கு கெடுபிடி | TVK | Vijay | GOAT Release

மறைமுக உத்தரவு; த.வெ.க. நிர்வாகிகளுக்கு கெடுபிடி | TVK | Vijay | GOAT Release கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ள விஜய், முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வரும் 22ல் நடத்த உள்ளார். ஆனால் அனுமதி வழங்க பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து போலீசார் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். கோர்ட்டை அணுக விஜய் தரப்பினர் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை ரிலீசாகிறது. அவரது கட்சி நிர்வாகிகள் தியேட்டர்கள் மட்டுமின்றி, பொது இடங்களிலும் பேனர்கள் வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த விஷயம் அமைச்சர்கள் காதுக்கு செல்ல மறைமுக நெருக்கடிகள் காரணமாக பேனர் வைப்பதற்கும் போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். அனுமதியின்றி வைக்கப்படுவதாக கூறி பேனர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் விஜய்க்கு இந்த தகவல்களை அனுப்பி உள்ளனர். பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் இந்த விஷயத்தில் பாதிக்க கூடாது. போலீஸ் அனுமதி பெற்றே பேனர்கள் வைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை