உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாய் கிழிய பேசினால் போதுமா? ஸ்டாலினை வறுக்கும் பாஜ அதிமுக!

வாய் கிழிய பேசினால் போதுமா? ஸ்டாலினை வறுக்கும் பாஜ அதிமுக!

வாய் கிழிய பேசினால் போதுமா? ஸ்டாலினை வறுக்கும் பாஜ அதிமுக! நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. திங்களன்று இப்பள்ளியின் சமையல் அறை பூட்டு மற்றும் சுவரில் மனித கழிவு வீசியும், அசிங்கமாக எழுதியும் வரைந்தும் இருந்தது. இது தொடர்பாக தலைமை ஆசிரியை தனலட்சுமி எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளியில் மனித கழிவு பூசப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளிகள், பொது இடங்களில் இதுபோன்ற அருவருக்கத்தக்க கொடூரங்கள் தொடர்ந்து வருகிறது. புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து 600 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தித்தணி அருகே மத்தூர் அரசு பள்ளி கதவி மனித கழிவு பூசியது; மேட்டூர் அடுத்த கொளத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் அறை மீது மனித கழிவு வீசப்பட்ட சம்பவங்களில் இதுவரைஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் பல கிராமங்களில் தீண்டாமை, இரட்டை குவளை, இரட்டை சுடுகாடு, கோயிலுக்குள் பட்டியல் இன மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. திராவிட மாடல் சாதனை ஆட்சி நடத்துவதாக தற்பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? என மத்திய இணையமைச்சர் முருகன் கேட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தமது அறிக்கையில், பள்ளியில் மலம் வீசும் இழி செயலில் ஈடுபடுகிறார்கள் என்றால், திமுக ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெளிவாகிறது என கூறியுள்ளார். வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று இந்த சம்பவம் நடந்திருக்காது. மைக் கிடைத்தால், சமூக நீதி பற்றி வாய்கிழிய பேசும் முதல்வர் ஸ்டாலின், தமது ஆட்சியில் சமூக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று பழனிசாமி கண்டித்துள்ளார்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி