2வது பெண் குழந்தையை வெறுத்த கொடூர தம்பதி | Girl child | Parents hate | Vellore | 9 days baby
வேலூர், ஒடுகத்தூர் அடுத்த பொம்மன்குட்டையை சேர்ந்தவர்கள் ஜீவா - டயானா தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த சூழலில், டயானா மீண்டும் கர்ப்பமானார். ஆகஸ்ட் 27ல் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயானாவுக்கு 2வது பெண் குழந்தை பிறந்தது. ரத்த அளவு குறைவாக இருந்ததால் டயானாவை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 9 நாட்கள் கழித்து தாயும், குழந்தையும் நேற்று வீட்டுக்கு வந்தனர். ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த தம்பதி, 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால், வீட்டின் அருகே இருந்த பப்பாளி மரத்தை வெட்டி அதில் வடியும் விஷம் நிறைந்த பாலை பெற்ற குழந்தை என்பதை மறந்து கல் நெஞ்சம் படைத்த தாயும், தந்தையும் பிஞ்சு குழந்தைக்கு கள்ளி பால் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை வாய், மூக்கில் ரத்தம் கொட்டி துடி துடித்து இறந்துள்ளது.