கொல்கத்தா சம்பவத்தில் முக்கிய திருப்பம்-பரபரப்பு | kolkata doctor case | ED Raid | Sandip Ghosh|CBI
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் நைட் டூட்டியில் இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. போலீஸ் டிப்பார்ட்மென்ட்டில் தன்னார்வலராக வேலை பார்த்த சஞ்சய் ராய் என்ற கொடூரன் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்த அரசு மருத்துவமனையில் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. மருத்துவமனையில் நிதி தொடர்பான பல முறைகேடு நடந்தது. எல்லா தில்லுமுல்லையும் பெண் டாக்டர் கண்டுபிடித்து விட்டார். எனவே அவர் கொலையில் சதி இருக்கலாம் என்று சக பயிற்சி டாக்டர்கள் கூறி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை காப்பாற்ற சந்தீப் கோஷ் முயற்சி செய்ததாகவும், தடயங்களை அழிக்க பார்த்ததாகவும் கூட குற்றச்சாட்டு உள்ளது.