கண் முன்னே நடந்த அதிர்ச்சி: கதறி துடித்த பெண் | Puducherry | Cow | Cattle Feed
கண் முன்னே நடந்த அதிர்ச்சி: கதறி துடித்த பெண் | Puducherry | Cow | Cattle Feed புதுச்சேரி திருவண்டார்கோயில் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். மனைவி இந்திராணி. தம்பதியினர் 15 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். வழக்கம் போல மாடு மேய்க்க சென்ற மாயகிருஷ்ணன் நேற்று மாலை மாடுகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். இரவு திடீரென இரண்டு மாடுகள் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்து இறந்தது. மீண்டும் காலையில் இரண்டு மாடுகள் அதே போல சுருண்டு விழுந்து இறந்தது. அடுத்தடுத்து நான்கு மாடுகள் இறந்ததால் மாயகிருஷ்ணன் நிலைகுலைந்து போனார். கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவரின் நான்கு மாடுகளும் இதே போல இறந்துள்ளது. தொடர்ந்து இங்கே மாடுகள் அடிக்கடி இறப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இறந்த மாடுகள் ஒவ்வொன்றும் 60 ஆயிரம் வரும். எங்கள் வாழ்வாதரமே போச்சு என கதறினார் இந்திராணி. மாடுகள் இறந்த பகுதியில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக மாடுகள் இறப்பதுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என திருவண்டார்கோயில் மக்கள் கோரிக்கை வைத்தனர்.