உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்க தயவின்றி ஆட்சி இல்லை என்கிறது ஆம் ஆத்மி! AAP | Haryana Election 2024 | Congress | Alliance? |

எங்க தயவின்றி ஆட்சி இல்லை என்கிறது ஆம் ஆத்மி! AAP | Haryana Election 2024 | Congress | Alliance? |

எங்க தயவின்றி ஆட்சி இல்லை என்கிறது ஆம் ஆத்மி! AAP | Haryana Election 2024 | Congress | Alliance? | அரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5ல் தேர்தல் நடக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா அரசை வீழ்த்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆலோசனை நடத்தியது. அரியானா மாநில ஆம் ஆத்மியும் அதை வரவேற்றது. ஆரம்ப நிலையில் கூட்டணி பேச்சுகள் நடந்தன. அரியானாவில் மொத்தம் 10 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு ஒரு சட்டசபை தொகுதி என 10 தொகுதிகள் வேண்டும் என ஆம் ஆத்மி கேட்டது. ஆனால் 5 தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என காங்கிரஸ் சொல்கிறது. காங்கிரசின் முடிவை ஏற்க முடியாது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் சந்தீப் பதக் தெரிவித்தார். மாநிலத்தின் 90 தொகுதியிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம். மேலிடத்தின் உத்தரவு கிடைத்ததும் மீதி தகவல்களைத் தெரிவிப்போம். எங்களின் பலத்தை குறைத்து மதிப்பிட்டவர்கள் பிற்காலத்தில் வருத்தப்படுவார்கள் என அவர் கூறினார். இதே போல அரியானா மாநில ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் அனுராக் தண்டாவும் காங்கிரஸ் முடிவை ஏற்க முடியாது என கூறி உள்ளார். தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக இல்லை என கூறுகின்றனர். ஆனால் உண்மையாக ஆம் ஆத்மி ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அரியானாவில் எந்த அரசு அமைய வேண்டுமானாலும் துடைப்பம் சின்னமும், அரவிந்த் கெஜ்ரிவாலும் தேவை என அனுராக் தண்டா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி 69 வேட்பாளர்களை இறுதி செய்துள்ளதாக தெரிகிறது. அது குறித்து காங்கிரஸ் டில்லி தலைமை இன்னும் முடிவு எடுத்து அறிவிக்கவில்லை. ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ராகுல் கேட்டறிந்து வருகிறார். இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, அரியானாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கெஜ்ரிவால் பிறந்தது ஹரியானா. அதை சுட்டிக் காட்டி சுனிதா பேசி வருகிறார். அரியானா மகனுக்கு வாக்களித்து ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் 1969ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் நாள், கிருஷ்ண ஜெயந்தி அன்று பிறந்தார். கடவுள் அரவிந்த் கெஜ்ரிவால் மூலமாக சிறப்பானதை செய்ய விரும்புகிறார் என சுனிதா, பிரசாரம் செய்து வருகிறார்.

செப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை