உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலி சான்றிதழ்களால் வேலையை இழந்த பூஜா கேத்கர்! Puja Khedkar | IAS | Dismissed

போலி சான்றிதழ்களால் வேலையை இழந்த பூஜா கேத்கர்! Puja Khedkar | IAS | Dismissed

போலி சான்றிதழ்களால் வேலையை இழந்த பூஜா கேத்கர்! Puja Khedkar | IAS | Dismissed | From Service | UPSC 2022ம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் பூஜா மனோரமா திலீப் கேத்கர் என்பவர் வெற்றி பெற்றார். அரசின் பல்வேறு பயிற்சிகளுக்கு பிறகு 2023ல் மகாராஷ்டிரா கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவர் புனே உதவி கலெக்டராக பணிபுரிந்தார். போலியான ஓ.பி.சி சான்றிதழ் மற்றும் மாற்று திறனாளி சான்றிதழ் கொடுத்து ஏமாற்றினார் என பூஜா கேத்கர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒரு நபர் கமிஷன் அமைத்து நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனது. அதையடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்படாமல் இருக்க பூஜா முன் ஜாமின் கோரியுள்ளார். உதவி கலெக்டராக பணியாற்றிய போது சொந்த சொகுசு காரில் சிகப்பு சுழல் விளக்கு பயன்படுத்தினார் என்ற சர்ச்சையிலும் அவர் சிக்கினார். இந்நிலையில் இந்திய நிர்வாக சேவையில் இருந்து மத்திய அரசு அவரை நீக்கி உத்தரவிட்டுள்ளது. 1954ஆம் ஆண்டு ஐஏஎஸ் விதிகளின் 12வது பிரிவின் கீழ், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை பூஜா கேத்கர் தொடர்ந்து மறுத்து வருகிறார். மாற்றுத் திறனாளி என்பதை நிரூபிக்க எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள தயார் எனவும் கூறி உள்ளார்.

செப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி