தெரிந்தே இப்படி செய்யலாமா? எல்லாரும் வீட்டுக்கு போங்க kanimozhi| dmk|tuticorin dmk mp
தெரிந்தே இப்படி செய்யலாமா? எல்லாரும் வீட்டுக்கு போங்க kanimozhi| dmk|tuticorin dmk mp தூத்துக்குடி லோக்சபா தொகுதி எம்பி கனிமொழி, தேர்தல் வெற்றிக்கு பின் மாவட்டத்தின் பல இடங்களுக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று அவர் திறந்த வேனில் சென்றார். வாழவல்லான் ஏரல் சாலையில் இளைஞர்கள் பலர் திமுக கொடியுடன் கனிமொழியின் வாகனத்தை டூவீலரில் பின் தொடர்ந்து சென்றனர். இதை கவனித்த கனிமொழி, வாகனத்தை நிறுத்தி சொல்லி இறங்கினார். டூவீலரில் பின்தொடர்ந்த இளைஞர்களை அழைத்து பேசினார். திமுக இளம் தொண்டர்கள் எனக்கூறிய அவர்களிடம், ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓடக்கூடாது என தெரிந்தும் இப்படி செய்யலாமா? விபத்து ஏற்பட்டால் ஹெல்மெட்தான் உயிரை காப்பாற்றும். இனி ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டக்கூடாது என அட்வைஸ் செய்தார். இளைஞர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட கனிமொழி, அவர்களை பத்திரமாக வீட்டுக்கு செல்லும்படி அனுப்பினார்.