பயண தூரத்திற்கான கட்டணம் தானாவே பிடித்தம் செய்யப்படும் GNSS| OBU| tollgate| satellite technology
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் ரொக்கம், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டபோது, வாகனங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க, பாஸ்டேக் வசதி அமல்படுத்தப்பட்டது. டோல் கேட்களில் காத்திருப்பதை இது குறைத்தாலும், சில நேரங்களில் நெரிசல் சிக்க வேண்டி இருக்கிறது. வாகனங்கள் டோல் கேட்களை எளிதாக கடந்து செல்ல குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் எனப்படும் GNSS டெக்னாலஜி நடைமுறைக்கு வர இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, சாட்டிலைட் அடிப்படையில் செயல்படக்கூடியது. சாட்டிலைட் இணைப்புக்காக ஆன் போர்டு யூனிட் எனப்படும் OBU கருவி வாகனங்களின் வெளிப்புறத்தில் பொறுத்தப்படும். OBU பொருத்தப்பட்ட வாகனங்கள் GPS தொழில்நுட்பம் மூலம் சாட்டிலைட் உடன் இணைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட தூரத்தில் பொருத்தப்படும் சிசிடிவி கேரமாக்களின் பதிவுகளும் சாட்டிலைட் உடன் ஒருங்கிணைக்கப்படும். டோல்கேட் உள்ள சாலைகளில் பணிக்கும்போது, முதல் 20 கிலோ மீட்டருக்கு பிறகு அந்த வாகனம் பயணிக்கும் தூரம், சாட்டிலைட் மூலம் கணக்கிடப்பட்டு பாஸ்டேக் போலவே வங்கி கணக்கில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். GNSS அடிப்படையிலான OBU கருவிகள் வாகனங்களில் பெரும்பாலும் செயல்பாட்டுக்கு வந்த பின் டோல்கேட்கள் படிப்படியாக அகற்றப்படும். அதுவரை பாஸ்டேக் நடைமுறையுடன் GNSS முறையிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். முதற்கட்டமாக அதிவிரைவு சாலைகள், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் GNSS அமலுக்கு வர உள்ளது. OBU என்ற சிறிய கருவியை பாஸ்டேக் போலவே அரசு வெப்சைட்களில் வாங்கலாம். புதிய வாகனங்களில் இனி தயாரிப்பு நிறுவனங்களே அவற்றை பொறுத்தி விற்பனை செய்யும்.