உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்சி தாவி விடாமல் தடுக்க பலே திட்டம் eps| palanisamy| admk|

கட்சி தாவி விடாமல் தடுக்க பலே திட்டம் eps| palanisamy| admk|

கட்சி தாவி விடாமல் தடுக்க பலே திட்டம் eps| palanisamy| admk| லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்விக்கான காரணம் குறித்து அறிய, தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார் பொதுச்செயலாளர் பழனிசாமி. பல மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மீது சரமாரி புகார்களை கூறினர். இதை எதிர்பாராத பழனிசாமி, கூட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மீது பகிரங்கமாக குறை சொல்லாமல் இருக்க தமது ஆதரவாளர்கள் மூலம் தடை போட்டார். எனினும், மாவட்ட செயலாளர் மீது அதிருப்தியில் உள்ளவர்கள் கட்சி தலைமைக்கு அது தொடர்பாக கடிதம் அனுப்பியபடி உள்ளனர். அதன் பிறகும், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது தலைமை நடவடிக்கை எடுக்காததால் பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். மாவட்ட செயலாளர்களும் தங்களுக்கு போட்டியாக கருதும் நிர்வாகிகளை ஒதுக்கி வைக்க முயற்சிக்கின்றனர். இச்சூழலில் அனைத்து கட்சியிலும் உள்ள அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க நடிகர் விஜய் முயற்சிப்பாக தகவல் வெளியானது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உட்பட பலரிடம் விஜய் தரப்பில் பேச்சு நடந்து உள்ளது. இதனால் மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி அதிருப்தியாளர்களையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக தோல்விகளை சந்தித்து வருவதால் கட்சியினர் சோர்ந்து போயுள்ளனர். இச்சூழலில் மாவட்ட செயலாளர்களை மாற்றினால் வீண் குழப்பம் ஏற்படும் என அதிக தலைமை கருதுகிறது. எனவே அவர்களை நீக்கும் எண்ணத்தை கைவிட்டுள்ளது. அதற்கு பதிலாக, புதிய மாவட்டங்களை பிரித்து அதிருப்தியாளர்களுக்கு பதவிகள் வழங்க பழனிசாமி யோசித்து வருகிறார். ஒவ்வொரு அணியிலும் புதிய பதவிகள் உருவாக்கி அதிருப்தியாளர்களை நியமித்து பிரச்னையை சுமூகமாக முடிக்க திட்டமிட்டுள்ளார். அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டநிகழ்வுகள் முடிந்ததும் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அதிமுகின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ