ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் அவதி
ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் அவதி சேலம் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, நீரேற்று திட்டத்தின் மூலமாக, சுற்றுவட்டாரத்தில் உள்ள நூறு ஏரிகள் நிரப்பப்படுகின்றன. நங்கவள்ளியில் உள்ள மூன்றரை ஏக்கர் ஏரி முழுவதும் நிரம்பியதால், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. 50க்கு மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் நடமாட முடியாமல் அவதிஅடைந்து வருகின்றனர். நங்கவள்ளி ஏரியில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் ஆகாயதாமரை செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. நீர் வெளியேறும் பாதையை அவை அடித்துள்ளதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஊருக்குள் தண்ணீர் வருவது அதிகரிப்பதால், ஏரியை தூர்வாரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் கூறினர்.
செப் 11, 2024