உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை டாக்டர் செய்த விபரீத செயல்: பின்னணி என்ன? madurai doctor arrested

மதுரை டாக்டர் செய்த விபரீத செயல்: பின்னணி என்ன? madurai doctor arrested

மதுரை டாக்டர் செய்த விபரீத செயல்: பின்னணி என்ன? madurai doctor arrested Chidambaram All Women Police Station woman doctor chidambaram medical college police crime மதுரையை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது (27). மதுரை தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படித்தவர். அப்போது, ஒரு மருத்துவ மாணவியை சதீஷ்குமார் காதலித்தார். அந்த பெண்ணும் இப்போது டாக்டர்தான். இருவரும் நீண்ட நாளாக காதலித்தனர். சதீஷ்குமாருக்கு மேலும் சில பெண் டாக்டர்களுடன் பழக்கம் இருப்பதை அறிந்ததும் அவருடனான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார், பெண் டாக்டர். சதீஷ்குமார் எடுத்த சமாதான முயற்சிகள் தோல்வி அடைந்தன. பெண் டாக்டருடன் காதல் மீண்டும் துளிர்க்கவில்லை. இருவரும் தீவிரமாக காதலித்த காலக் கட்டத்தில் வீடியோ காலில் பேசி மகிழ்ந்திருக்கின்றனர். அதை சதீஷ்குமார் ரெக்கார்ட் செய்து வைத்திருந்திருக்கிறார். அந்த வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் சதீஷ்குமார் பரப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து பெண் டாக்டர் அதிர்ச்சியடைந்தார். சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆபாசமாக சித்தரித்தல், பெண்மைக்கு களங்கம் கற்பித்தல், உட்பட 6 பிரிவுகளில் சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தினார். மதுரைக்கு தனிப்படையினர் விரைந்தனர். வீட்டில் இருந்த சதீஷ்குமாரை கைது செய்து, சிதம்பரத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !