உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யாரும் எட்டாத உயரத்தில் 5 நாட்கள் நடந்த டூர் Polaris Dawn| Space X| space mission

யாரும் எட்டாத உயரத்தில் 5 நாட்கள் நடந்த டூர் Polaris Dawn| Space X| space mission

அமெரிக்காவில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளி சுற்றுலாவை கடந்த 11ம் தேதி தொடங்கியது. போலாரிஸ் டான் விண்கலத்துடன், பால்கன் 9 Falcon 9 ராக்கெட், உலகின் முதல் விண்வெளி சுற்றுலாவுக்காக புறப்பட்டது. இதில் ஜரெட் ஐசக்மேன், ஸ்காட் போடீட், அன்னா மேனன், சாரா கில்லிஸ்( Jared Isaacman,Scott Poteet, Anna Menon, Sarah Gillis) ஆகிய நான்கு பேர் விண்வெளிக்கு சென்றனர். ஸ்பேஸ் விமானம் விண்வெளியில் 1408 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்தது. இது, சர்வதேச விண்வெளி நிலையத்தையும் தாண்டி செல்லக்கூடிய தூரம். 1972ல் நாசாவின் அப்பேலோ நிலவு பயணத்திற்கு பிறகு இந்தளவு உயரத்தை யாரும் எட்டியது இல்லை. 12ம் தேதி இக்குழுவினர், வணிக ரீதியிலான முதல் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டனர். 2 மணிநேரம் விண்வெளியில் நடந்தனர். கேப்ஸ்யூலில் இருந்து வெளியே வந்த ஜாரெட் ஐசக்மேன் முதல் நபராக ஸ்பேசில் நடந்தார். இதன் மூலம் ஸ்பேஸ் வாக் சென்ற விண்வெளி வீரர் அல்லாத முதல் மனிதர் என்ற பெருமை பெற்றார்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ