10 ஆண்டுக்கு பின் நடக்கும் தேர்தலில் மக்கள் ஆர்வம் J&K| Jammu kashmir election|
10 ஆண்டுக்கு பின் நடக்கும் தேர்தலில் மக்கள் ஆர்வம் J&K| Jammu kashmir election| யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. 2019ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில், பாஜ மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்தும் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. 90 சுயேச்சைகள் உள்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 23.27 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 18-19 வயதுக்குட்பட்ட 1.23 லட்சம் இளைஞர்களும் அடங்குவர். 3,276 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடப்பதால், மத்திய ஆயுத துணை ராணுவப் படை, ஜம்மு காஷ்மீர் ஆயுதப்படை போலீஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.