லெபனானில் பரபரப்பு இஸ்ரேல் தான் காரணமா? | Pager Explosions | Lebanon
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஓராண்டாக போர் நடக்கிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் நேற்று ஒரே நேரத்தில், 100க்கு மேற்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின், பேஜர் எனப்படும் தகவல் தொடர்பு மின்னணு சாதனம் வெடித்து சிதறியது. லெபனானின் பல பகுதிகளில் நடந்த இந்த சம்பவத்தின்போது, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும், அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும் காயமடைந்தனர். சிரியாவின் சில பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. ஹிஸ்புல்லா அமைப்பினர் சிலர் உட்பட, 9 பேர் பலியாகினர். 2,800 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில், 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லெபனானுக்கான தங்களுடைய துாதர் மொஜாதா அபானியும் காயமடைந்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.