திருப்பூர் ஆஸ்பிடலில் நடந்த பரபரப்பு சம்பவம் Tiruppur Medical college hospital
திருப்பூர் ஆஸ்பிடலில் நடந்த பரபரப்பு சம்பவம் Tiruppur Medical college hospital GH 2 bodies in one mortuary van அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டிபிரபு. திருப்பூரில் டிரைவராக பணியாற்றி வந்தார். குடும்பப்பிரச்னையால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு போட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டிபிரபு மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு, உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாண்டி பிரபு உடலை அருப்புக்கோட்டைக்கு கொண்டு செல்ல அவரது தந்தையிடம் பணம் இல்லை. இலவச அமரர் ஊர்தியில் உடலை கொண்டு வந்து தரும்படி ஆஸ்பிடலில் கேட்டார். அதிகாரிகள் ஓகே என்றனர். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கனவே ஒரு சடலம் வைக்கப்பட்டிருந்த ப்ரீசர் பாக்ஸ்க்கு மேலே பாண்டிபிரபுபின் உடலை வைத்து கொண்டு செல்ல ஊழியர்கள் ஏற்பாடு செய்தனர். இதனால் கோபமடைந்த பாண்டி பிரபுவின் தந்தை, இன்னும் 2 அமரர் ஊர்திகள் சும்மா நிற்கும்போது எதற்காக ஒரே வண்டியில் 2 உடல்களை எடுத்துச் செல்கிறீர்கள் என கேட்டு சத்தம் போட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள், இது வழக்கமான நடைமுறைதான் என்றனர். முதல்ல ஏத்துன பாடிய விருதுநகருக்கு கொண்டு போறோம்; உங்க பையன் பாடிய வழியில் இறக்கி வைச்சிடுவோம் என கூறியுள்ளனர். இலவச சேவை என்பதற்காக இப்படியா அவமதிப்பது? என பாண்டி பிரபுவின் தந்தை ஆஸ்பிடல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து கதறி அழுதார். இதனால் தனி அமரர் ஊர்தி மூலம் பாண்டி பிரபுவின் உடல் அருப்புக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்பிடல் ஊழியர்களுடன் பாண்டிபிரபுவின் தந்தை சண்டை போடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.