உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் தொடர்பா?: என்கவுன்டர் பின்னணி

ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் தொடர்பா?: என்கவுன்டர் பின்னணி

சென்னையில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர். சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நடந்துள்ள 2வது சம்பவம் இது. சென்னை வியாசர்பாடி பி.டி குடியிருப்பு பகுதியில் ரவுடி பாலாஜி பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அந்த இடத்தை அதிகாலையில் சுற்றி வளைத்தனர். இதை தெரிந்து கொண்ட ரவுடி, போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோ முயன்றார். கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தற்காப்புக்காக சுட்டபோது, ரவுடி பாலாஜி இதயத்தில் துண்டு துளைத்து சரிந்து விழுந்தார்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி