உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இண்டி கூட்டணி பந்த்: பஸ் மீது கல் வீச்சால் பதட்டம்|I.N.D.I.A bloc bandh|Power tariff hike|Puducherry

இண்டி கூட்டணி பந்த்: பஸ் மீது கல் வீச்சால் பதட்டம்|I.N.D.I.A bloc bandh|Power tariff hike|Puducherry

புதுச்சேரியில் உயர்த்திய மின் கட்டணத்தை ரத்து செய்யவும், மின்துறை தனியார் மயமாவதை கைவிட வலியுறுத்தியும் இண்டி கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று பந்த் நடக்கிறது. நகரம், கிராம பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், மூடப்பட்டுள்ளன. அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் பஸ், ஆட்டோ, டெம்போ என அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கிய நிலையில், அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்குகின்றன. ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்த புதுச்சேரி அரசு பஸ் மீது நெல்லித்தோப்பு சிக்னலில் மர்ம நபர்கள் கல் வீசியதில் பின் பக்க கண்ணாடி உடைந்தது. பஸ்சுக்குள் இருந்த 60 வயது பெண் படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பந்த் நடத்தும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் கடலூர் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். திமுக மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சலீம் தலைமையில் நடந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். போராட்டத்தின்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்களை வழிமறித்து, அங்கிருந்து நகர விடாமல் சாலையில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். போக்குவரத்து பாதித்ததால் மறியல் செய்த இண்டி கூட்டணி கட்சியினரை குண்டு கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்துனர்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை