உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இண்டி கூட்டணி, பிடிபிக்கு மோடி கடும் எச்சரிக்கை | Modi at Srinagar| Modi at Kashmir| BJP| Kashmir

இண்டி கூட்டணி, பிடிபிக்கு மோடி கடும் எச்சரிக்கை | Modi at Srinagar| Modi at Kashmir| BJP| Kashmir

ஸ்ரீநகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரில் நேற்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. வரலாறு காணாத வகையில் பெருவாரியான மக்கள் ஓட்டளித்துள்ளனர். இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். கிஷ்துவாரில், 80 சதவீதம்; தோடா, ராம்பனில் தலா 70 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சியை தடுக்க 3 குடும்பங்கள் உள்ளன. இவர்களை கேள்வி கேட்க யாருமே இல்லை என நினைக்கின்றனர். எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும். பின் மக்களை சுரண்ட வேண்டும் என்பதே அவர்களின் லட்சியமாக உள்ளது.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை