உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைகீழாக மாறிய பழங்குடியினர் வாழ்க்கை - சாதித்து காட்டிய மத்திய அரசு | Aanaimalai

தலைகீழாக மாறிய பழங்குடியினர் வாழ்க்கை - சாதித்து காட்டிய மத்திய அரசு | Aanaimalai

தலைகீழாக மாறிய பழங்குடியினர் வாழ்க்கை - சாதித்து காட்டிய மத்திய அரசு | Aanaimalai | Tiger sanctuary | Pollachi | Sugarcane breeding | villagelife ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நாகரூத்து என்ற பழங்குடியின கிராமத்தை தான் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். கடல் மட்டத்தில் இருந்து 600 அடி உயரத்தில் உள்ள செங்குத்தான மலை இது. கரடுமுரடான பாதையில் நடந்து செல்லும் போது, வழியில் சிறு ஓடை உங்களை வரவேற்கும். பூக்களை தேடிச்சுற்றும் பட்டாம்பூச்சிகள், மலர்ந்து விரிந்திருக்கும் வண்ண மலர்கள், பூச்சி, பறவைகளின் சத்தம், ஒத்தையடி பாதைகள் ஓங்கி வளர்ந்துள்ள மரங்களின் நிழல், எளிமையான மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை எல்லாமே இயற்கையோடு ஒன்றிணைந்து இருக்கும். கடந்த 2021-22ம் ஆண்டில் இந்த கிராமத்தில் மலை மலசர் பழங்குடியினர்களிடையே ஆய்வு நடந்தப்பட்டது. அவர்களின் வாழ்கையை மேம்படுத்த கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், காய்கறி விதைகள், பாக்கு நாற்றுகள், ரேடியோ, வீட்டு உபயோக பொருட்கள், நாட்டு சர்க்கரை, பண்ணை கருவிகள் போன்றவை வழங்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் ஒர் அங்கமான கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் தான், பழங்குடியின மேம்பாட்டு செயல் திட்டத்தின் மூலம் இந்த உதவிகளை செய்து வருகிறது. இதனால் மலை கிராம மக்களின் வாழ்க்கையும் மேம்படுள்ளது.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை