கோயில்களை மீட்கும் வரை ஓயமாட்டோம்: விஷ்வ ஹிந்து பரிஷத் | VHP | Nation wide protest | Laddu issue
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கோயில்கள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்க துவங்கி உள்ளது. நாடு முழுதும் உள்ள கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, இந்துக்கள் வசம் ஒப்படைக்கும் பணியை இன்று முதல் தொடங்க உறுதி ஏற்றுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக, அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி, அந்தந்த மாநில முதல்வர்கள் மூலம் எங்கள் கோரிக்கையை கவர்னர்களிடம் சமர்ப்பிப்போம். தேவைப்பட்டால் கோர்ட்டை நாடுவோம். கோயில்களை நிர்வகிப்பது அரசின் வேலை அல்ல என்பதை கோர்ட்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பிரசாதத்தில் கலப்படம் என்பது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் நடக்கும் விவகாரம் அல்ல. பல கோவில்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயில் பாயாசத்தில் கூட கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.