இஸ்ரேல் கார் கேமராவில் பதிவான திக் திக் காட்சி Israel vs Hezbollah | Hezbollah missile attack video
லெபனான் நாட்டில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து திங்கட்கிழமை போருக்கு நிகரான தீவிர தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. பேஜர் அட்டாக், வாக்கி டாக்கி அட்டாக்கை தொடர்ந்து இந்த தீவிர தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. திங்கள், செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதலில் லெபனானில் 558 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாக்கள் ஆயுதம் பதுக்கி வைத்திருந்த பல இடங்களை இஸ்ரேல் அழித்தது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணை, ராக்கெட் படை தளபதியையும் கொன்றது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க நேற்று மட்டும் 300 ராக்கெட், ஏவுகணைகளை வடக்கு இஸ்ரேலில் உள்ள நாசரேத், ஹகாலி உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா ஏவியது. பல குண்டுகளை அயர்ன் டோம் மூலம் இஸ்ரேல் வானத்திலேயே இடைமறித்து தாக்கியது. இருப்பினும் பல குண்டுகள் வடக்கு இஸ்ரேலில் விழுந்து வெடித்தது.