ரவுடியை குண்டுக்கட்டாக தூக்கும் போலீஸ் | Salem Court | Salem Rowdy
ரவுடியை குண்டுக்கட்டாக தூக்கும் போலீஸ் | Salem Court | Salem Rowdy சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி ஜான். இவர் மீது அடிதடி, கொலை, கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2017ல் நெப்போலியன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். சமீபத்தில் கஞ்சா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜான் கடந்த சனிக்கிழமை ஜாமினில் வெளியே வந்தார். அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் 60 நாட்கள் தொடர்ந்து கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் நெப்போலியன் கொலை வழக்கில் ஆஜராக சேலம் கோர்ட்டுக்கு மனைவி சரண்யாவுடன் வந்தார் ஜான். கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வீட்டு செல்ல காரில் ஏற சென்றார். அப்போது அவரது காரை சூழ்ந்த போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். எதுக்கு கூட்டிட்டு போறீங்கன்னு சொன்னால் தான் வருவேன். இல்லைன்னா வரமாட்டேன் என அடம் பிடித்தார் ஜான். போலீசார் பிடியில் இருந்து நழுவி ஓட முயன்றார். அவரது மனைவியும் எனது கணவரை விட்டுவிடுங்கள் என கத்தியபடி ஓடினார். 10க்கும் மேற்பட்ட போலீசார் ரவுடி ஜானை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. என் கணவரை என்கவுன்டர் செய்ய தூக்கி செல்கின்றனர் என ஜான் மனைவி கதறினார். இந்த நிலையில் ரவுடி ஜான் கைது குறித்து போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கடந்த 21ஆம் தேதி ஜாமினில் வந்தார். அப்போது 60 நாட்கள் தினமும் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் ஜான் முறையாக கையெழுத்து போட வரவில்லை. இதனால் தான் அவர் கோர்ட் வளாகத்தில் கைது செய்யப்பட்டார் என போலீசார் கூறினார்.