மெட்ரோ ரயிலுக்கு நிதி கேட்கிறார், ஸ்டாலின் CM stalin delhi PM Narendra modi
மெட்ரோ ரயிலுக்கு நிதி கேட்கிறார், ஸ்டாலின் CM stalin delhi PM Narendra modi chennai metro expansion நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கும் ஸ்டாலின் தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்த கோரிக்கை மனு அளிக்கிறார். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படியும், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். தமிழகத்துக்கான வரி நிலுவைகள், கடந்த ஆண்டு தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்துகிறார். முதல்வர் ஸ்டாலின், தனது டில்லி பயணத்தின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் இண்டி கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். டில்லி பயணத்தை முடித்துவிட்டு நாளை மாலை சென்னை திரும்புகிறார்.