ராமரே கனவில் வந்து கேட்ட சம்பவம்! | Ramar | Ramar Temple | Ayodhya Ram mandir
ராமரே கனவில் வந்து கேட்ட சம்பவம்! | Ramar | Ramar Temple | Ayodhya Ram mandir சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோயில் அமைய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தவர். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் முதல், ராம பிரானுக்கு தன்னால் ஆன காணிக்கையை சமர்ப்பிக்க விரும்பினார். தனக்கு என்ன வேண்டும் என்பதை ராமரே வெளிப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வேண்டி வந்தார். இந்த சூழலில் அவரிடம் பக்தர் ஒருவர் தான் கண்ட கனவை சொன்னார். தன்னைப் போன்ற ஒரு உற்சவர் விக்ரகம் செய்து சமர்ப்பிக்க சொல்லுமாறு ராமர் கூறியதாக அவர் கூறினார். கடந்த ராமநவமி முதல் விக்ரகம் செய்யும் திருப்பணியை அரவிந்த் தொடங்கினார். இதில் அவரது உறவினர் கணேஷ் நாகராஜும் இணைந்தார். இரண்டு அடி உயர பஞ்சலோக விக்ரகம் தயார் ஆனது. மூலவர் போலவே அமைந்த அந்த சிலையை அயோத்தியில் சமர்ப்பிக்க காஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் அருளாசி வழங்கினார். ராமர் சிலை அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள், ராம சடக்ஷரி ஹோமம் நடந்தது. யாகசாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் சமர்ப்பித்தனர். கோயில் நிர்வாக டிரஸ்ட் பொதுச் செயலர் சம்பத் ராய், டிரஸ்ட் அங்கத்தினரான உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தர் சுவாமிகள் பெற்றுக் கொண்டனர். உலக நன்மை வேண்டி இந்த உற்சவமூர்த்தி எழுந்தருளி இருப்பதாக அரவிந்த் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.