உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பதி சர்ச்சையால் அயோத்தி பிரசாத முறையில் வரப்போகும் மாற்றம் | Tirupati laddu issue

திருப்பதி சர்ச்சையால் அயோத்தி பிரசாத முறையில் வரப்போகும் மாற்றம் | Tirupati laddu issue

திருப்பதி சர்ச்சையால் அயோத்தி பிரசாத முறையில் வரப்போகும் மாற்றம் | Tirupati laddu issue | Ayodhya ram temple | Chief priest | உலகளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள பிரபலமான கோயில் பிரசாதங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுதும் விற்கப்படும் நெய்யின் தூய்மை குறித்து அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கவலை தெரிவித்துள்ளார். கோயில் அர்ச்சகர்களின் மேற்பார்வையில் மட்டுமே பிரசாதம் தயாரிக்கப்பட வேண்டும். அனைத்து பெரிய கோயில்கள், மடங்களில் வெளி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பிரசாதத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயில் பிரசாதங்களில் தேவையில்லாத பொருட்களை கலப்படம் செய்து, சர்வதேச அளவில் கோயில்களை அவமதிக்கும் முயற்சிகள் நடக்கிறது. சந்தையில் கிடைக்கும் எண்ணெய், நெய்யின் தூய்மை குறித்து அரசு கடுமையான ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை