மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி திட்டங்களை துவக்கிய மோடி Modi at Maharashtra
மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி திட்டங்களை துவக்கிய மோடி Modi at Maharashtra| Solapur Airport Inauguration| Industrial Corridor| Mumbai| மகாராஷ்டிராவில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 11,200 காேடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணிகளை துவக்கி வைத்தார். மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதால், தனது பயணத்தை ரத்துசெய்துவிட்டு வீடியோ கான்பரன்சிங்கில் திட்டங்களை மோடி துவக்கினார். புனே நகரில் 1,810 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய மெட்ரோ ரயில் வழித்தடம், விரிவாக்கம் செய்யப்பட்ட சோலாபூர் விமான நிலையம், சத்ரபதி சாம்பாஜி நகரில் 8,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டை ஆகியவை பிரதமர் மோடி துவங்கி வைத்த திட்டங்களில் முக்கியமானவை. 2995 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். விழாவில் மோடி பேசியதாவது: மகாராஷ்டிராவில் பாஜ தலைமையிலான டபுள் இன்ஜின் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில், புல்லட் ரயில் திட்டங்கள் மட்டுமின்றி விவசாயிகள் நலன் காக்கவும் இந்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இன்று துவங்கப்பட்ட திட்டங்களால், இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். நாடு வேகமான வளர்ச்சியை நோக்கி செல்கிறது. வளர்ச்சியை ஆதரிக்கும் அரசை மக்கள் ஆதரிக்க வேண்டும்; பாஜ தலைமையில் நிலையான அரசு அமைந்தால்தான் மகாராஷ்ட்ராவுக்கு சங்கடங்கள் வராது என மோடி கூறினார்.