/ தினமலர் டிவி
/ பொது
/ மல்லிகார்ஜுன் கார்கேவை பங்கம் செய்த ராஜ்நாத் சிங் Congress | Rajnath Singh | Kharge | Modi| Haryana
மல்லிகார்ஜுன் கார்கேவை பங்கம் செய்த ராஜ்நாத் சிங் Congress | Rajnath Singh | Kharge | Modi| Haryana
ஹரியானாவில் வரும் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பாஜ - காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் பாஜ தலைவர்கள் சுற்றி சுழன்று பிரசாரம் செய்கின்றனர். தாத்ரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:. மத்தியில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜ தலைமையிலான ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் எங்கள் அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட முன்வைக்க முடியாது. மத்திய அமைச்சர்கள் யாரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது கிடையாது.
செப் 30, 2024