உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீரென தரைவழியாக புகுந்து அடிக்கும் இஸ்ரேல் | Israel | Hezbollah |

திடீரென தரைவழியாக புகுந்து அடிக்கும் இஸ்ரேல் | Israel | Hezbollah |

திடீரென தரைவழியாக புகுந்து அடிக்கும் இஸ்ரேல் | Israel | Hezbollah | லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக லெபனானில் உள்ள பல இடங்களில் குண்டு மழை பொழிந்தது. முதலில் பேஜர், வாக்கி டாக்கி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வெடிக்க வைத்து ஹிஸ்புல்லாவுக்கு அதிர்ச்சி தந்தது இஸ்ரேல். இதெல்லாம் சும்மா டிரெயிலர் தான் என்பது போல அடுத்தடுத்து பெரிய தாக்குதல்களை நடத்தி ஹிஸ்புல்லாவை நிலை குலைய வைத்தது இஸ்ரேல். லெபனானில் பதுங்கி இருக்கும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் ஹிஸ்புல்லா பற்றிய துல்லிய தகவலை ராணுவத்துக்கு சொன்னது. இஸ்ரேல் ஏவுகணைகள் குறி வைத்து தாக்கியதில் ஹிஸ்புல்லா அமைப்பின் 3 தளபதிகள் முதலில் கொல்லப்பட்டனர். இப்ராகிம் அகில்,இப்ராகிம் குபைசி,ஹூசைன் சரூர் போன்ற முக்கிய தளபதிகளை இஸ்ரேல் வரிசையாக குண்டு போட்டு கொன்றது. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கதையையும் முடித்தது இஸ்ரேல் ராணுவம். பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் நஸ்ரல்லா மட்டுமல்லது அவரது மகள்சைனாப் நஸ்ரல்லா, கமாண்டர் அலி கராகி ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி தர ஹிஸ்புல்லா யோசிக்கும் நேரத்தில் அடுத்த சம்பவம் செய்துவிடுகிறது இஸ்ரேல். இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளது. இதோடு நிறுத்திவிட மாட்டோம். எதிர்காலத்தில் எங்கள் மீது தாக்குதல் நடத்தவே அலறும் அளவுக்கு இறங்கி அடிக்க வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. இதுவரை போர் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் லெபனானை தாக்கிய இஸ்ரேல் இப்போது தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது. லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழி தாக்குதலை தொடங்கி விட்டோம் என இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் முதல் கட்ட தாக்குதல் ஆரம்பமானது. இது வடக்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால அச்சுறுத்தலாக உள்ள பகுதியாகும். தரைவழி தாக்குதலில் சமீபத்தில் ராணுவ பயிற்சி அளித்து தயார்படுத்தப்பட்ட வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிக் படைகள் களத்தில் ராணுவ வீரர்களுக்கு பக்கபலமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் நார்தன் ஆரோஸ் (Northern Arrows) என பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கையில் ஹிஸ்புல்லா மீது தரைவழி தாக்குதல் நடத்தப்படும். இதுதவிர காசா மற்றும் பிற முனைகளில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலும் தொடரும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹமாஸ், ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏமனில் உள்ள ஹவுதி படை மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றம் உலக போராக வெடிக்குமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ