போலீசையே பதறவிட்ட கஞ்சா போதை ஆசாமி | Chennai | Otteri Crematorium
சென்னை ஓட்டேரியில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் சுடுகாடு உள்ளது. நகருக்கு நடுவே மறைவான பகுதியாக இருப்பதால் போதை ஆசாமிகளின் கூடாரமாகிவிட்டது. எந்த நேரம் சென்றாலும் கஞ்சா, மது போதை ஆசாமிகளை உள்ளே காண முடிகிறது. இவர்கள் சுடுகாட்டு வருபவர்களை மிரட்டி தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதை ஆசாமிகளை தடுக்க வேண்டிய சுடுகாடு ஊழியரே அங்கே போதையில் ரகளை செய்துள்ளார். சுடுகாட்டில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் போதையில் தரையில் படுத்து இரவு கதவை மூட விடாமல் தடுத்துள்ளார். சுடுகாட்டின் நுழைவாயில் பகுதியில் படுத்து கொண்டு எழுந்திருக்கவே இல்லை.
அக் 01, 2024