உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாம்பன் புதிய பாலத்தின் அடுத்தடுத்த சோதனைகள் வெற்றி | Pamban new bridge | Vertical lift bridge

பாம்பன் புதிய பாலத்தின் அடுத்தடுத்த சோதனைகள் வெற்றி | Pamban new bridge | Vertical lift bridge

பாம்பன் கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பில் நடந்த புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள் 2 மாதங்களுக்கு முன் முடிந்தது. புதிய ரயில் பாலத்தில் இன்ஜின், சரக்கு ரயிலை இயக்கி பார்த்த இந்திய ரயில்வே சோதனை வெற்றிகரமாக நடந்தது. பாலத்தின் மைய பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல 27 மீட்டர் உயரத்திற்கு ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கும் வகையில் 600 டன் எடையில் செங்குத்து இரும்பு தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேலே தூக்கி இயக்க சீரான எடை தேவைப்பட்டதால் 2 பக்கமும் உள்ள தூண்களில் இரும்பு கட்டிகள் நிரப்பும் பணி நடந்து வந்தது. முழுமையாக எடை நிரப்பப்பட்டு எடை சீரான நிலையில், அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்து தூக்கு பலத்தை தூக்கி சோதனை செய்யும் பணியை தொடங்கினர். காலை முதல் கட்டமாக செங்குத்து பாலம் சுமார் 2 அடி உயரம் தூக்கப்பட்டு பின்னர் மீண்டும் கீழே இறக்கப்பட்டது. மாலை மீண்டும் செங்குத்து தூக்கு பாலம் ஹைட்ராலிக் லிஃட் உதவியுடன் மெல்ல மெல்ல மேலே தூக்கப்பட்டது. சுமார் 10 மீட்டர் தூரம் மேலே வெற்றிகரமாக தூக்கப்பட்டதால் ரயில்வே ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பட்டாசுகள் வெடித்து வான வேடிக்கையுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !