பீகாரை பதம் பார்க்கும் நேபாள வெள்ளம்: மக்கள் தவிப்பு Nepal Flood| Bihar Flood| Nepal Heavy Rain
நமது பக்கத்து நாடான நேபாளத்தில் செப்டம்பர் 28ல் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட முக்கிய பிராந்தியங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மலைப்பாங்கான இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டானது. வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 209 பேர் பலியாகி உள்ளனர். 147 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு ராணுவம், போலீசார் என 20 ஆயிரம் பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவில் புதைந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 274 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.