உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலியல் வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர் குர்மித் Gurmit ram rahim

பாலியல் வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர் குர்மித் Gurmit ram rahim

பாலியல் வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர் குர்மித் Gurmit ram rahim | hariyana elections | barole | congress | ஹரியானா மாநிலத்தின் சிர்சா பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் குர்மித் ராம் ரஹிம். தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற குற்றச்சாட்டில் 2017ல் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி கொலை செய்த வழக்கிலும், ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கிலும் குர்மித் ராம் ரஹிமுக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஹரியானாவின் ரோடக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மித் ராம், 4 ஆண்டுகளில் 10- முறைக்கு மேல் பரோலில் வந்துள்ளார். 2022ல் பஞ்சாப் தேர்தல் நேரத்திலும் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதே நாளில் குர்மித் ராம் தந்தையின் நினைவு நாளும் வருகிறது. அதைக் காரணம் காட்டி பரோலுக்கு விண்ணப்பித்தார். தேர்தல் காலம் என்பதால் ஹரியானா மாநில தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. ஹரியானாவுக்குள் நுழைய கூடாது, அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது, உத்தர பிரதேச மாநிலம் பாக்பாத் நகரில் தங்கி இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதித்து தேர்தல் ஆணையம் அவருக்கு 20 நாள் பரோல் வழங்கியது. இன்று அவர் வெளியே வந்தார். அரசியல் காரணங்களுக்காக தேர்தல் சமயத்தில் அவருக்கு பரோல் வழங்கப்பட்டிருப்பதாக ஹரியானா காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஹரியானா மாநில தேர்தல் ஆணையம் அதை மறுத்துள்ளது. கடும் நிபந்தனைகளுடன்தான் பரோல் தரப்பட்டிருப்பதாக தெரிவித்தது.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை